

திருப்பூர்:
திருப்பூர் 15 வேலம்பாளையம் நேரு வீதியை சேர்ந்தவர் பாபு (வயது 72). இவருடைய மகன் வசந்தகுமார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 வேலம்பாளையம் போலீசார் ஒரு வழிப்பறி வழக்கில் வசந்தகுமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மகன் ஜெயிலுக்கு சென்றதால் தந்தை பாபு மன வேதனையடைந்தார்.
சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில்தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.