

ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் இடம்பிடித்திருந்தார். தற்போது அவர் தோள்பட்டை காயத்தால் அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் அணிக்கே வெற்றி வாய்ப்பு என்று பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரெட் லீக் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா சிறந்த அணி. உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இருந்து ஜை ரிச்சர்ட்சன் காயத்தால் விலகியுள்ளார். ஆனால் கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எந்தவொரு அணியாக இருந்தாலும், மிகவும் தயாரான நிலையில்தான் உலகக்கோப்பைக்குச் செல்லும்.
ஆனால் இதுவெல்லாம் அவர்கள் இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப, எப்படி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் இருக்கிறது.
தொடர் இங்கிலாந்தில் எந்தமாதம் நடைபெறுகிறது என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் உகந்ததாக இருக்காது.