

தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே உள்ள பி.ஆர். பாளையம் பகுதியை சேர்ந்தவர் கேசவரெட்டி (வயது46) விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்தில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சரியான கூலி கொடுப்பதில்லை என்று கூறி அந்த மர்ம நபர் கேசவரெட்டியை கத்தியால் குத்தி விட்டார். பின்னர் அவர் தப்பி ஓடி விட்டார்.
கத்தி குத்தில் காயம் அடைந்த கேசவரெட்டியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்.