கல்லாவி அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற விவசாயி கைது

கல்லாவி அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற விவசாயியை கைது செய்த போலீசார் அவரை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கல்லாவி அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற விவசாயி கைது
Published on

சிங்காரப்பேட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அருகே எஸ்.மோட்டூர் பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ராஜா (42) என்பவர் அடிக்கடி சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் நேற்று அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த ராஜா அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

அப்போது அவர் கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனை கண்ட ராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் கல்லாவி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ராஜாவை கைது செய்தனர். பின்னர் அவரை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com