மைக்கேல் ஜாக்சன் உருவத்தில் வாலிபர் - டி.என்.ஏ. சோதனை செய்ய ரசிகர்கள் வற்புறுத்தல்

மறைந்த மைக்கேல் ஜாக்சன் போல் அச்சு அசலாக உள்ள செர்ஜியோ கோர்டெஸ் தான் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
செர்ஜியோ கோர்டெஸ்
செர்ஜியோ கோர்டெஸ்
Published on

பாப் உலக மன்னன் மைக்கேல் ஜாக்சன். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் இறந்தார்.

இந்த நிலையில் அர்ஜென்டினாவின் பார்சிலோனாவில் பிறந்தவரும், தற்போது பாப் உலகில் வளர்ந்து வரும் கலைஞரான செர்ஜியோ கோர்டெஸ், மறைந்த மைக்கேல் ஜாக்சனின் உருவத்துடன் அச்சு அசலாக உள்ளார்.

உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மைக்கேல் ஜாக்சனின் பாடல்களுக்கு நடனம் ஆடி வருகிறார். மைக்கேல் ஜாக்சனின் தோற்றத்துடன் இருக்கும் செர்ஜியோ கோர்டெஸ் தற்போது புகழ்பெற்று வருகிறார்.

சமீபத்தில் செர்ஜியோ கோர்டெஸ் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில் அவர், அனைத்து மைக்கேல் ஜாக்சன் ரசிகர்களுக்கும் வணக்கம். நான் உங்களை நேசிக்கிறேன். எனது இசை நிகழ்ச்சியை பாருங்கள் என்று கூறி இருந்தார்.

இதுபற்றி செர்ஜியோ கோர்டெஸ் கூறும்போது, என்னை பார்த்த ஒரு பத்திரிகையாளர், நான் மைக்கேல் ஜாக்சன் தோற்றத்தில் இருப்பதாக கூறினார். என்னை மைக்கேல் ஜாக்சன் போன்று மேக்கப்அப் போட்டு அவரது பத்திரிக்கையில் வெளியிட விரும்பினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com