கோவில் பணியாளர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் குடும்பநல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு

கோவில் பணியாளர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் குடும்பநல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
கோவில் பணியாளர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் குடும்பநல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு
Published on

தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணியாற்றும் திருக்கோவில் நிரந்தர பணியாளர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதி வழங்க மைய நிதி ஏற்படுத்தப்பட்டது.

அதில் இருந்து கிடைக்கும் வட்டித்தொகையை கொண்டு நிதி உதவி வழங்கவும், இதற்காக திருக்கோவில் பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து மாத சந்தாவாக ரூ.15 பிடித்தம் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்படி பணியில் இருக்கும்போது திருக்கோவில் நிரந்தர பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்பட்டது. இதன்பின்னர், இந்த தொகை ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 2008-ம் ஆண்டு முதல் ரூ.1 லட்சம் வழங்க அரசு உத்தரவிட்டது.

மேலும், வைப்பு நிதியில் இருந்து பெறப்படும் வட்டித்தொகையை கொண்டு குடும்ப நலநிதி உதவி வழங்க முடியும், கூடுதல் நிதிச்சுமை இருக்காது, மைய நிதியை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் தெரிவித்து இருந்தார்.

இதை பரிசீலனை செய்து திருக்கோவில் நிரந்தர பணியாளர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப நல நிதி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிட கேட்டுக்கொண்டார்.

இந்து சமய அறநிலையத்துறை கமிஷனரின் கருத்துருவை அரசு கவனத்துடன் பரிசீலனை செய்து குடும்ப நல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க அனுமதித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com