இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் டு பிளிசிஸ் விளையாடவில்லை: டீன் எல்கர் கேப்டன்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக டீன் எல்கர் கேப்டனாக செயல்படுகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் டு பிளிசிஸ் விளையாடவில்லை: டீன் எல்கர் கேப்டன்
Published on

தற்போது இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதன் முதல் போட்டி 6-ந்தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டு பிளிசிஸ் இடம்பிடித்திருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டு பிளிசிஸின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. கடினமான சூழ்நிலையில் குழந்தை பிறந்ததால், டு பிளிசிஸ் அருகில் இருந்து மனைவியை கவனித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. குழந்தையும், தாயும் நலமாக இருந்தால் டு பிளிசிஸ் இங்கிலாந்து திரும்ப வாய்ப்புள்ளது. இல்லாவிடில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com