கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு: கோபாலபுரம் வந்தார் மு.க.அழகிரி

திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது மகன் மு.க.அழகிரி கோபாலபுரம் இல்லம் வந்தடைந்தார். #Karunanidhi #DMK #MKAlagiri
கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு: கோபாலபுரம் வந்தார் மு.க.அழகிரி
Published on

சென்னை:

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று கருணாநிதியின் உடல்நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

பின்னர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், விரைவில் பூரண குணம் அடைவார் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி நேற்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து உறவினர்களிடம் விசாரித்தார்.

இன்று காலை 5 மணிக்கு மதுரையில் இருந்து 10-க்கும் மேற்பட்ட கார்களில் தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்ட மு.க.அழகிரி கோபாலபுரம் இல்லம் வந்தடைந்தார்.#Karunanidhi #DMK #MKAlagiri

X

Maalai Malar
www.maalaimalar.com