மயிலாடுதுறை அருகே தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை

மயிலாடுதுறை அருகே எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் கவலை அடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறை அருகே தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை
Published on

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மணல்மேடு அருகே வில்லிய நல்லூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனி இவருடைய மகள் பிரீத்திநிஷா (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படித்து வந்தார். இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் பிரீத்திநிஷா தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com