ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ரூ.10 லட்சம் நன்கொடை: கொ.ம.தே.க. அறிவிப்பு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக ரூ.10 லட்சத்தை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு நன்கொடையாக வழங்கப்படும் என ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ரூ.10 லட்சம் நன்கொடை: கொ.ம.தே.க. அறிவிப்பு
Published on

ஈரோடு:

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியிருப்பதாவது:-

புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையவிருப்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல உலக முழுவதும் பரவி வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை சேர்க்க கூடியதாகும்.

தமிழ் இருக்கை அமைப்பதற்கு பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வரும் நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பங்களிப்பும் அதில் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.

மரியாதை பண்புமிக்க கொங்கு தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இது அமையும் என நம்புகிறோம். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக ரூ.10 லட்சத்தை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு நன்கொடையாக வழங்க கட்சியின் ஆட்சிமன்ற குழு ஆலோசனையில் தீர்மானிக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com