எரியோடு அருகே அரசு பஸ் மோதி கூலி தொழிலாளி பலி

எரியோடு அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எரியோடு அருகே அரசு பஸ் மோதி கூலி தொழிலாளி பலி
Published on

எரியோடு:

திண்டுக்கல் அருகே எரியோடு மரவப்பட்டியைச் சேர்ந்த நல்லுச்சாமி மகன் மாரிமுத்து (வயது 22). கூலித் தொழிலாளியான இவர் எரியோட்டில் இருந்து தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். எரியோடு வடக்கு மேடு காவிரி கூட்டுக்குடிநீர் தேக்கம் அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் இவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி மாரிமுத்து பலியானார்.

விரைந்து வந்த எரியோடு போலீசார் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com