

லண்டனில் வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெஸ்ட் ஹாம் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் முதல் பாதி நேரம் முடிவதற்கு முந்தைய நிமிடத்தில் வெஸ்ட் ஹாம் அணியின் அண்ட்ரிய் ஹோர்மோலென்கோ கோல் அடித்தார். இதனால் வெஸ்ட் ஹாம் முதல் பாதி நேர ஆட்டத்தில் 1-0 என முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேர ஆட்டத்திலும் நீண்ட நேரமாக இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் வெஸ்ட் ஹாம் அணியின் ஆரோன் கிரேஸ்வெல் ஒரு கோல் அடிக்க வெஸ்ட் ஹாம் 2-0 என மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது.