

டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற 3-வது டெஸ்டின் போது இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவின் இடது கை விரலில் காயம் ஏற்பட்டது (ஆண்டர்சன் வீசிய பந்தை பிடிக்க முயன்றபோது இடது கை நடுவிரலை பந்து பலமாக தாக்கியது). பின்னர் மருத்துவ பரிசோதனையில் விரலில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.
3-வது டெஸ்டிற்கும் 4-வது டெஸ்டிற்கும் இடையில் சுமார் 10 நாட்கள் இடைவெளி இருந்ததால் அவரது காயம் குணமடைந்து அணியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். ஆனால், காயம் முழுமையாக குணமடைந்தால்தான் அவர் விக்கெட் கீப்பராக பணியாற்றுவார். இல்லையெனில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக களம் இறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.