இங்கிலாந்துக்கு தலைவலியை ஏற்படுத்தும் மிடில் ஆர்டன் பேட்ஸ்மேன்கள்

எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து, 71 ரன்னுக்குள் ஏழு விக்கெட்டை இழந்தது. #ENGvIND
பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ்
Published on

அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து ஜோ ரூட், ஜென்னிங்ஸ், பேர்ஸ்டோவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 80 ரன்னில் ஆட்டமிழந்ததும் 71 ரன்களுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து 287 ரன்னில் சுருண்டது.

இங்கிலாந்து அணி தற்போதுதான் இப்படி மிடில் ஆர்டர் சொதப்பலால் ரன்குவிக்க முடியாமல் திணறவில்லை. சமீப காலமாக இந்த அணிக்கு மிடில் ஆர்டர் பிரச்சனை இருந்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக லார்ட்ஸ் டெஸ்டில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 184 ரன்னில் சுருண்டதது. கடைசி 6 விக்கெட்டுக்களை 35 ரன்னுக்குள் இழந்தது.

நியூசிலாந்துக்கு எதிராக ஆக்லாந்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 58 ரன்னில் சுருண்டது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆஷஸ் தொடர் முழுவதும் இந்த சொதப்பல் நிகழ்ந்தது. சிட்னியில் 3 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 118 ரன்னுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. பெர்த்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 35 ரன்னுக்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.

அடிலெய்டு டெஸ்டில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 64 ரன்னுக்குள் 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. பிரிஸ்பேனில் 4 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 56 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com