இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: முதல் போட்டியில் செல்சியை 4-0 என துவம்சம் செய்தது மான்செஸ்டர் யுனைடெட்

இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் முதல் ஆட்டத்தில் செல்சியை 4-0 என துவம்சம் செய்து வெற்றியோடு தொடரை தொடங்கியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட்.
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி வீரர்கள்
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி வீரர்கள்
Published on

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சொந்தமான ஓல்டு டிராபோர்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் அணி சிறப்பாக விளையாடியது. ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் மார்கஸ் ரஷ்போர்டு பெனால்டி மூலம் தனது முதல் கோலை பதிவு செய்தார்.

அதன்பின் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் மான்செஸ்டர் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 65-வது நிமிடத்தில் அந்தோணி மார்சியல் கோல் அடித்தார். அதன்பின் பால் போக்பா கொடுத்த பந்தை 67-வது நிமிடத்தில் ரஷ்போர்டு மீண்டும் கோலாக்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com