

ரஷியாவில் ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இங்கிலாந்து அணி இடம்பிடித்துள்ள குரூப்பில் துனிசியா, பனாமா, பெல்ஜியம் அணிகள் இடம்பிடித்துள்ளன.
ரஷியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் இத்தாலி மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாட இங்கிலாந்து முடிவு செய்திருந்தது. துரதிருஷ்டவசமாக இத்தாலியும், நெதர்லாந்தும் உலகக்கோப்பைக்கு தகுதி பெறவில்லை.
இதனால் இங்கிலாந்து அணி நைஜீரியா, கோஸ்டா ரிகா அணிகளுக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்துள்ளது. ரஷியாவிற்கு செல்வதற்கு முன் ஜூன் 2-ந்தேதி நைஜீரியாவுடன் புகழ்பெற்ற விம்ளே மைதானத்தில் விளையாடுகிறது. கோஸ்டா ரிகா உடன் ஐந்து நாட்கள் கழித்து விளையாடுகிறது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பிரேசில் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை இங்கிலாந்து 0-0 என டிரா செய்திருந்தது. #Worldcup #ENG #RussiaWorldCup