இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி- இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #INDvsENG
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி- இங்கிலாந்து அணி அறிவிப்பு
Published on

லண்டன்:

விராட்கோலி தலைமையிலானா இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

முதலில் 20 ஓவர் போட்டி தொடர் நடக்கிறது. இதன் முதல் ஆட்டம் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டி தொடர் 12-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி முடிகிறது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்காக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இயன் மார்கன் தலைமையில் 14 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

தசைப்பிடிப்பு காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் விளையாடாத ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது காயம் அடைந்த ஆல்-ரவுண்டர் கிறிஸ்லோக்ஸ் தேர்வு செய்யப்படவில்லை.

14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி வருமாறு:-

இயன் மார்கன் (கேப்டன்), மொய்ன்அலி, பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் படயர் ஜேக்பால், அலெக்ஸ் ஹொல்ஸ், புளுங்கட், ஆதில் ரஷித், ஜோரூட், ஜேசன் ராய், டேவிட் விஸ்லி, மார்ருவுட், டாம்குர்ரன். #INDvsENG

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com