

நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 307 ரன் குவித்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 278 ரன் எடுத்தது. 29 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்தது. ஜோரூட் 30 ரன்னும், மலாலின் 19 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 352 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
இதனால் நியூசிலாந்துக்கு 382 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து தரப்பில் 4 வீரர்கள் (ஸ்டோன்மேன், வின்ஸ், கேப்டன் ஜோரூட், மலாலின்) அரைசதம் அடித்தனர். கிராண்ட்ஹோம் 4 விக்கெட்டும், போல்ட், வாக்னர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.