லீட்ஸ் டெஸ்ட்- இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 302/7

லீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvPAK
லீட்ஸ் டெஸ்ட்- இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 302/7
Published on

லண்டன்:

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 48.1 ஓவரிலேயே 174 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

அதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். கீடன் ஜென்னிங்ஸ் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பஹீம் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் குட் உடன், கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 51 ரன்கள் சேர்த்தது.

நிதானமாக விளையாடி வந்த குக் 46 ரன்கள் எடுத்து ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து டோமினிக் பெஸ் களமிறங்கினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. ரூட் 29 ரன்களுடனும், பெஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 

முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியைவிட 68 ரன்கள் பின்தங்கி நிலையில் இங்கிலாந்து அணி நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்தது. ரூட் மேற்கொண்டு 16 ரன்கள் எடுத்து 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் டேவிட் மலன் களமிறங்கினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி எடுத்த ஸ்கோரை கடந்தது. மலன் 28 ரன்கள் எடுத்து அமிர் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் டோமினிக் பெஸ் ஆட்டமிழந்தார். அவர் 49 ரன்கள் எடுத்தார். 

அதைத்தொடர்ந்து, ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். பேர்ஸ்டோவ் 21 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து கிறிஸ் வோக்ஸ் களமிறங்கினார். வோக்ஸ் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் பல்டருடன், சாம் குர்ரன் ஜோடி சேர்ந்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 34 ரன்களுடனும், சாம் குர்ரன் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இது பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 128 ரன்கள் அதிகமாகும். பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் மொகமது அமிர், பஹீம் அஷ்ரப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். #ENGvPAK

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com