கோவை அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் புளூவேல் விளையாட்டு விளையாடியதால் தற்கொலை செய்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

கோவை:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பாலன் என்பவரது மகன் அச்சுதன்(வயது 18).

இவர் கோவையை அடுத்து கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார்.

பெரியார்நகரில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார். நேற்று இவரது நண்பர்கள் கல்லூரிக்கு சென்று விட்டார். அச்சுதன் மட்டும் அறையில் தனியாக இருந்தார்.

மாலையில் நண்பர்கள் அறைக்கு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது அறைக்குள் அச்சுதன் தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

இதைக்கண்டு அதிர்ச்சிய டைந்த நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் திருமேனி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, அச்சுதன் புளூவேல் விளையாட்டு விளையாடியதால் தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து போலீசார் அறையில் இருந்து அவரது செல்போனை கைப்பற்றி சோதனை நடத்தினர்.

ஆனால் அவரது செல்போனில் புளூவேல் விளையாட்டு பதவிறக்கம் செய்யப்படவில்லை. மேலும் அச்சுதன் பேசுவதற்காக மட்டும் தான் செல்போனை உபயோகிப்பார் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு காரணங்கள் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com