ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா அருகே 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: 2 ராணுவ வீரர்களும் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா அருகே 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: 2 ராணுவ வீரர்களும் உயிரிழப்பு
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டம் ஹஜின் எல்லைப்பகுதியில் இன்று காலை பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதை அறிந்து அங்கு ராணுவ வீரர்கள் விரைந்தனர். பின்னர் தீவிரவாதிகளை நோக்கி ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூட நடத்தினர். தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தினர்.

இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவம் தரப்பில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். 3 வீரர்கள் காயமடைந்தனர். அப்பகுதியில் இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகள் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என சிஆர்பிஎப் அதிகாரி தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை பத்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் கமாண்டர் உமர் காலித் கொல்லப்பட்டான். சோபியான் மாவட்டத்தில் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com