கண்ணமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

கண்ணமங்கலம் அருகே வீட்டில் பெண் மிக்ஸி அரைக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பலியானார்.
பலி
பலி
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த படவேடு அருகே உள்ள தஞ்சாம்பாறை கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா (55). என்பவர் நேற்று தனது வீட்டில் மிக்ஸி அரைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயக்கமடைந்து கிடந்தவரை, சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர், மல்லிகா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். 

இச்சம்பவம் தொடர்பாக அமாவாசை சந்தவாசல் போலீசில் புகார் செய்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, சப்-இன்ஸ்பெக்டர் தரணி ஆகியோர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com