பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்- மின்சார வாரியம் வேண்டுகோள்

குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் தடைபட்டது. மின் தடை மற்றும் மின் விபத்து ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும் என்று மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்
பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்
Published on

கோவை:

கோவை மின்பகிர்மான பொறியாளர் கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை பெரியநாயக்கன்பாளையம், பி.ஜி.புதூர் பிரிவு பகுதிகளில் சிலர் பட்டம் விட்டு விளையாடுகிறார்கள். அவர்கள் விடும் பட்டம் உயரழுத்த மின்பாதையில் சிக்கியதால் கடந்த 27 மற்றும் 30-ந்தேதிகளில் மின் தடை ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரி, குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் தடைபட்டது. மின் தடை மற்றும் மின் விபத்து ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com