காயல்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலி

காயல்பட்டினத்தில் மின்மோட்டார் சுவிட்சை போட்டதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பெண் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
காயல்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலி
Published on

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் தைக்காபுரத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கமலம் (வயது 53). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேகர் இறந்து விட்டார். கமலம் மகள் மற்றும் மகன்களுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலையில் கமலம் வீட்டில் இருந்த நீரேற்றும் மின்மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். பின்னர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே கமலம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் அங்கு சென்று கமலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com