தனிமைப்படுத்தப்பட்ட நபர் கடித்ததில் மூதாட்டி உயிரிழப்பு

தேனி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் கடித்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
சமூக தனிமை (மாதிரி படம்)
சமூக தனிமை (மாதிரி படம்)
Published on

தேனி:

தேனி மாவட்டம் போடி  ஜக்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 34 வயதான நபர் ஒருவர் இலங்கையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். அங்கிருந்து சமீபத்தில் நாடு திரும்பினார். கொரோனா அச்சம் காரணமாக அவர் வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு வார காலமாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாததால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று திடீரென ஆக்ரோஷமாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த அவர், அப்பகுதியைச் சேர்ந்த நாச்சியம்மாள் (வயது 90) என்ற மூதாட்டியின் தொண்டையில் கடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்த மூதாட்டி தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார். 

தனிமைப்படுத்தப்பட்ட நபர் மனஉளைச்சலில் வீட்டை விட்டு வெளியேறி கடித்ததில் மூதாட்டி உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

புதுக்கோட்டை அருகே தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com