எகிப்து அதிபராக அப்துல் சிசி மீண்டும் தேர்வு

எகிப்து நாட்டின் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சுமார் 97 சதவிகித வாக்குகள் பெற்ற அப்துல் சிசி மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். #EgyptPresident #AbdelFattahelSisi #EgyptElection2018
எகிப்து அதிபராக அப்துல் சிசி மீண்டும் தேர்வு
Published on

எகிப்து நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதற்கான ஓட்டு பதிவு கடந்த திங்கட்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடந்தது. இந்த தேர்தலில் அதிபர் அப்துல் சிசி மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மவுசா முஸ்தபா போட்டியிட்டார்.

முதல் 2 நாள் நடந்த தேர்தலில் ஓட்டு பதிவு மிக குறைவாக இருந்தது. இதனால் ஓட்டு போடாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தேர்தல் துறை அறிவித்தது. ஆனாலும், ஓட்டு பதிவு அதிகமாக நடக்கவில்லை. ஓட்டு பதிவு குறைவாக இருந்தால் தற்போதைய அதிபருக்கு தோல்வி ஏற்படலாம் என கருதினார்கள்.

எனவே, அதிபர் தரப்பில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இதே போல் எதிர்க்கட்சிகளும் பணம் கொடுத்தன. ஆனாலும் கூட ஓட்டு பதிவு தொடர்ந்து மந்தமாகவே இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com