சிகிச்சை பெறும் தா.பாண்டியனை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தா.பாண்டியனை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். #edappadipalanisamy #thapandian
சிகிச்சை பெறும் தா.பாண்டியனை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்
Published on

சென்னை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். 86 வயதான அவர் கடந்த 28-ந்தேதி காலை வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தா.பாண்டியனை அவரது உறவினர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு டாக் டர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மூச்சு திணறல் மற்றும் சிறுநீரக பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வரும் தா.பாண்டியனை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இதேபோல இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜாவும் நலம் விசாரித்தார்.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அரசு பொது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் தா.பாண்டியனை நேரில் சந்தித்தார். அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோரும் நலம் விசாரித்தனர்.

இதேபோல ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் தா.பாண்டியனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். #edappadipalanisamy #thapandian

X

Maalai Malar
www.maalaimalar.com