எடப்பாடி தலைமையிலான அரசு எவ்வித பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு காண்பது இல்லை: ஓ.பன்னீர் செல்வம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணும் அரசு இல்லை என்று டெல்லியில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
எடப்பாடி தலைமையிலான அரசு எவ்வித பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு காண்பது இல்லை: ஓ.பன்னீர் செல்வம்
Published on

பாரதீய ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியில் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். பின்னர் மாலை ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாஜக குடியரசுத் தலைவர் வேட்புமனு தாக்கலுக்கு ஆதரவு தர டெல்லி வந்தேன். அதிமுக அணிகள் இணைப்பு நோக்கத்திற்காக டெல்லி வரவில்லை. இரு அணிகள் இணைப்பு முயற்சி தற்போது இல்லை. பொதுச்செயலாளரை நியமிக்க அதிமுக விதிகளில் இடமில்லை. அதிமுகவில் தேர்தலை நடத்தி பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பழனிசாமி தலைமையிலான அரசு மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணும் அரசு இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்வோம்.

கருத்து வேறுபாடு இருந்தால் சசிகலா - பழனிசாமி அணியினர் ஒரே மாதிரியான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வார்களா?

X

Maalai Malar
www.maalaimalar.com