இரட்டை இலை சின்னம் விசாரணையை மீண்டும் ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம்

இரட்டை இலை விவகாரத்தில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் நவம்பர் 6-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.
இரட்டை இலை சின்னம் விசாரணையை மீண்டும் ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம்
Published on

புதுடெல்லி:

அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்ட பின்னர் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை கைப்பற்றுவது தொடர்பாக இரு அணிகளுக்கும் மோதல் நிலவியது. இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை இரு தரப்பினரும் அணுகினர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தலைமை தேர்தல் ஆணையத்திடம் இரு தரப்பினரும் பிரமான பத்திரங்களை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையின் போது ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் டி.டி.வி தினகரன் தரப்பினரின் வாதங்கள் நடைபெற்றன. இரு தரப்பினரின் வழக்கறிஞர்கள் சட்ட விதிமுறைகளை சொல்லி தங்களுக்கு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என வாதிட்டனர்.

இரு தரப்பு விசாரணைகளை கேட்டறிந்த பின்னர் மீண்டும் இவ்விவகாரம் 6-ம் தேதி விசாரிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com