ஈத்தாமொழி அருகே கொரோனாவால் வேலை இழந்த பெயிண்டர் தற்கொலை

ஈத்தாமொழி அருகே கொரோனாவால் வேலை இழந்த பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ராஜாக்கமங்கலம்:

ஈத்தாமொழியை அடுத்த புதூர், ஊத்தங்கரையை சேர்ந்தவர் செல்வன் (வயது51). பெயிண்டர்.

செல்வனுக்கு செல்வ ராணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கொரோனா பிரச்சனையால் செல்வனுக்கு கடந்த 5 மாதங்களாக வேலை இல்லை.

இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார். குடும்ப செலவுகளுக்கும் பணம் இல்லாமல் தவித்தார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது செல்வன் வீட்டு படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை கண்ட அவரது மனைவி அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஈத்தாமொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மெல் ஜெனில் மற்றும் போலீசார் விரைந்து சென்று செல்வனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செல்வனின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com