ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகாக பதிவு

ஜப்பானில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகாக பதிவு
Published on

டோக்கியோ:

ஜப்பானின் தெற்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கியுஷு தீவில் இருந்து சுமார் 682 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், இதனால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.

நில அதிர்வு பகுதியில் அமைந்துள்ள ஜப்பானில்தான் அதிக அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com