பெண்களுக்கான 100மீ ஓட்டம்- 11.43 வினாடிகளில் கடந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் டுட்டீ சந்த்

பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் 11.43 வினாடிகளில் கடந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த். #AsianGames2018
பெண்களுக்கான 100மீ ஓட்டம்- 11.43 வினாடிகளில் கடந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் டுட்டீ சந்த்
Published on

ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் கலந்து கொண்டார்.

இறுதிப் சுற்றுக்கான அரையிறுதி ஒன்றில் 7 பேருடன் டுட்டீ சந்த் பங்கேற்றார். இவர் 11.43 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து 3-வது இடம்பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதி 2-ல் சீன வீராங்கனை யோங்லி வெய் 11.29 வினாடியில் பந்தைய தூரத்தை கடந்து முதல் இடம்பிடித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com