அரியானா மாநில துணை முதல்-மந்திரிக்கு கொரோனா பாதிப்பு

அரியானா மாநில துணை முதல்-மந்திரி துஷ்யந்த் சவுதாலாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியானா மாநில துணை முதல்-மந்திரி துஷ்யந்த் சவுதாலா
அரியானா மாநில துணை முதல்-மந்திரி துஷ்யந்த் சவுதாலா
Published on

சண்டிகார்:

அரியானா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியில், ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, துணை முதல்-மந்திரியாக இருக்கிறார். அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், “எனக்கு எந்த கொரோனா அறிகுறிகளும் இல்லை. இருந்தாலும், கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதால், என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த ஒரு வாரத்தில் என்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com