துரைமுருகன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
துரைமுருகன்
துரைமுருகன்
Published on

சென்னை:

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் ரத்த அழுத்தம் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு தேவையான சிகிச்சை அளித்தனர். இதில் அவரது உடல் நிலை தேறியது. இதனால் நேற்று ராயப்பேட்டையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் துரைமுருகன் பங்கேற்றார்.

அதன்பிறகு வீட்டுக்கு சென்ற துரைமுருகனுக்கு மீண்டும் உடல் நலக்கோளாறு ஏற்பட்டது.

உடனடியாக அவரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மீண்டும் டாக்டர்கள் சிகிச்சை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் துரைமுருகன் பங்கேற்கவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com