நான்கு நாள் பகல் - இரவு டெஸ்டில் டு பிளிசிஸ் இல்லை: டி வில்லியர்ஸ் கேப்டன்

ஜிம்பாப்வேவிற்கு எதிரான நாக்கு நாள் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் டு பிளிசிஸ் விளையாடவில்லை. இதனால் டி வில்லியர்ஸ் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.
நான்கு நாள் பகல் - இரவு டெஸ்டில் டு பிளிசிஸ் இல்லை: டி வில்லியர்ஸ் கேப்டன்
Published on

நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை நடத்த தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ஆர்வமாக உள்ளது. இதற்கு முன்னோட்டமாக ஜிம்பாப்வே அணிக்கெதிராக ‘பாக்சிங் டே’ என அழைக்கப்படும் டிசம்பர் 26-ந்தேதி (இன்று) பகல்-இரவு போட்டியாக நடத்த முடிவு செய்தது. இதற்கு ஐ.சி.சி. அனுமதி அளித்தது.


வங்காள தேச தொடரின்போது காயம் அடைந்த டு பிளிசிஸ் (பழைய படம்)

அதன்படி தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இந்திய நேரப்படி இன்று மாலை நான்கு நாட்கள் கொண்ட பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நடக்க இருக்கிறது. முக்கியமான இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் களம் இறங்கவில்லை. அவருக்குப் பதிலாக டி வில்லியர்ஸ் கேப்டனாக செயல்படுகிறார்.

சமீபத்தில் வங்காள தேச அணி தென்ஆப்பிரிக்கா சென்றிருந்தது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது டு பிளிசிஸ் முதுகு வழி காரணமாக அவதிப்பட்டார். இதனால் 6 வாரம் காலம் ஓய்வெடுக்க அறிவுரை வழங்கப்பட்டது. இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த தோள்பட்டை காயத்திற்காக ஆபரேசன் செய்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com