திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருத்துறைபூண்டி-முத்துப்பேட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் ஊராட்சி மங்களநாயகிபுரத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் வரவில்லை. குடிநீர் குழாய்கள் குழியில் இருப்பதால் குடிநீர் பிடிப்பது சிரமமாக இருப்பதாகவும் தற்போது பெய்த மழையால் குடிநீர் மழைநீர் கலந்து கலங்களாக வருவதாகவும் கூறி நெடும்பலம் பகுதி மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்சாந்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து மறியல் கை விடப்பட்டது.

இதனால் திருத்துறைபூண்டி-முத்துப்பேட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com