உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு எதிரிநாட்டு பீரங்கிகளை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த ‘நாக்’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி
Published on

புதுடெல்லி:

எதிரிநாட்டு பீரங்கிகளை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த தாக்குதல் ரக ஏவுகணைகளை (நாக்) இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணைகளில் சில, கடந்த ஜூன் மாதம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சோதனை நடத்தப்பட்டது.

ராஜஸ்தான் பாலைவனத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது 2 வெவ்வேறு இலக்குகளை குறிவைத்து ‘நாக்’ ஏவுகணை ஏவப்பட்டது. அப்போது 2 இலக்குகளையும் மிகவும் துல்லியமாக இந்த ஏவுகணைகள் தாக்கி அழித்தன. இதன் மூலம் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணைகள் 7 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கவல்லது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com