ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் திரவுபதி முர்முக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக பாரதிய ஜனதாவின் திரவுபதி முர்முவை நிறுத்த காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே முன்னாள் டெல்லி மெட்ரோ ரெயில் தலைவர் ஸ்ரீதரன் பெயரை பா.ஜனதா பரிசீலித்து வருகிறது.
திரவுபதி முர்மு
திரவுபதி முர்மு
Published on

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வருகிற ஜூலை மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க ஜூலை 17-ந் தேதி தேர்தல் நடக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரை தேர்ந்தெடுக்க அக்கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவில் மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பா.ஜனதா வேட்பாளரை தேர்வு செய்யும் முன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சந்தித்துப்பேசி ஒருமித்த ஆதரவை திரட்ட முடிவு செய்துள்ளது.

பா.ஜனதா குழுவினர் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார்கள். தொடர்ந்து பா.ஜனதா தலைவர் அமித் ஷா மும்பையில் கூட்டணி கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்துப் பேசுகிறார்.

தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோருடன் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு சந்தித்து பா.ஜனதா வேட்பாளரை ஆதரிக்க கேட்டுக்கொண்டார்.

பா.ஜனதா சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக ஒடிசாவைச் சேர்ந்த திரவுபதி முர்மு நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. இவர் தலித் வகுப்பினர் ஆவார். தற்போது இவர் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக இருக்கிறார்.

திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அவரை வேட்பாளராக நிறுத்தினால் ஆதரவு அளிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 ஸ்ரீதரன்

இவர் எந்த அரசியல் கட்சியையும் சேராதவர். எனவே அவரை வேட்பாளராக நிறுத்தினால் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவை பெறலாம் என்று பா.ஜனதாவில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com