சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நிம்மதி அளிக்கிறது- டாக்டர் ராமதாஸ் கருத்து

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று சுப்ரீம்கோர்ட்டு கூறியிருப்பது நிம்மதி அளிக்கிறது என்று ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நிம்மதி அளிக்கிறது- டாக்டர் ராமதாஸ் கருத்து
Published on

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

தேசிய கல்வி கொள்கையில் இந்தி பாடம் கட்டாயம் என்ற பரிந்துரை திரும்ப பெறப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்த பா.ம.க.வுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி இதுவாகும்.

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று சுப்ரீம்கோர்ட்டு கூறியிருப்பது நிம்மதி அளிக்கிறது. இந்த திட்டத்தால் உழவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் கவசமும், காவலனும் பா.ம.க. தான் என்பதை மக்கள் உணர்வார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com