டிரம்பை புறக்கணித்த போலந்து அதிபர் மனைவி: கைகுலுக்க மறுப்பு

போலந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்ற டிரம்புக்கு அந்நாட்டு அதிபரின் மனைவி கை கொடுக்காமல் புறக்கணித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டிரம்பை புறக்கணித்துவிட்டு அவரது மனைவி மெலானியாவுடன் கை குலுக்க வரும் அகடா
டிரம்பை புறக்கணித்துவிட்டு அவரது மனைவி மெலானியாவுடன் கை குலுக்க வரும் அகடா
Published on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் போலந்து நாட்டுக்கு சென்றார். அவருடன் மனைவி மெலானியும் இருந்தார். அங்கு பத்திரிகையாளர்களுக்காக அதிகாரப் பூர்வ புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அங்கு போலந்து அதிபர் டூடாவுடன் அவரது மனைவி அகடா கொர்ஹாசரும் வந்தார். அப்போது கை குலுக்குவதற்காக அகடாவிடம் டிரம்ப் தனது வலது கையை நீட்டினார்.

ஆனால் டிரம்புக்கு கை கொடுக்காமல் புறக்கணித்து விட்டு அவரது மனைவி மெலானியாவிடம் சென்று கை குலுக்கினார். இதனால் டிரம்பின் முகம் வாடி விட்டது. ஏமாற்றத்துடன் ஏதோ ஒரு மாதிரி இருந்தார்.

இச்செய்தி வீடியோவுடன் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் போலந்து அதிபர் டூடாவின் மனைவி அகடாவின் இச்செயலை சரியான மட்டையடி என டுவிட்டரில் பலரும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலந்து அதிபர் டூடா விளக்கம் அளித்துள்ளார். தனது மனைவி அகடா, டிரம்ப் மனைவி மெலானியாவுடன் கை குலுக்கி விட்டு பின்னர் அவருடன் கை குலுக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com