அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கார் டிரைவர் புகார்

ஓவர் டைம் பணிக்கு சம்பளம் தரவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது அவரது கார் டிரைவர் புகார் அளித்துள்ளார். #Trump
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கார் டிரைவர் புகார்
Published on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கார் டிரைவராக பணி புரிந்தவர் நோயல் சின்ட்ரன். இவர் கடந்த 25 ஆண்டுகளாக டிரம்பின் கார் டிரைவராக இருந்தார்.

டிரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் வர்த்தக நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் டிரைவராக பணியாற்றினார். இந்த நிலையில் அவர் டிரம்ப் நிறுவனத்தின் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், கடந்த 6 ஆண்டுகளாக டிரம்ப் மற்றும் அவரது நிறுவனத்துக்கு 3,300 மணி நேரம் ‘ஓவர் டைம்’ பணி பார்த்து இருக்கிறேன். ஆனால் அதற்கான சம்பளம் தரவில்லை.

எனவே மணிக்கு ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 20 லட்சம் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு பெற்றுக் கொள்ளப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com