

வடகொரியாவின் தந்தையும், அந்த நாட்டின் தற்போதைய தலைவர் கிம் ஜாங் அன்னின் தாத்தாவுமான கிம் இல் சுங்கின் பிறந்தநாள் கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. வடகொரியாவின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் இந்த விழாவில் கிம் ஜாங் அன் கலந்துகொள்ளவில்லை. அவர் தலைவராக பொறுப்பேற்றதற்கு பின் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை தவிர்த்ததால் அவரது உடல் நிலை குறித்து சந்தேகங்கள் எழுந்தன. இதற்கிடையில், சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பிரபல அமெரிக்க செய்தி நிறுவனம் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது.