அமெரிக்க தேசிய கொடிக்கு தவறான வண்ணம் கொடுத்த டிரம்ப் - நெட்டிசன்கள் கிண்டல்

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றிருந்த டிரம்ப், அங்கு குழந்தைகளுடன் தேசிய கொடி வரையும் போது தவறான வண்ணத்தை கொடுத்தது கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. #Trump #US
அமெரிக்க தேசிய கொடிக்கு தவறான வண்ணம் கொடுத்த டிரம்ப் - நெட்டிசன்கள் கிண்டல்
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் தேசிய கொடியில் 7 சிவப்பு கோடுகள், 6 வெள்ளை கோடுகள் என மொத்தம் 13 கோடுகள் இருக்கும். இந்த கோடுகள் அமெரிக்கா உருவான போது இருந்த 13 மகாணங்களை குறிக்கும். மேலும், இடது ஓரத்தில் நீல நிற கட்டத்துக்குள் 50 நட்சத்திரங்கள் இருக்கும். இது, தற்போது உள்ள 50 மாநிலங்களை குறிக்கும்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் ஓஹியோ மாநிலத்தில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு சென்றனர். அங்கு குழந்தைகள் தேசிய கொடிகளை நோட்டுகளில் வரைந்து கொண்டு இருந்தனர். அவர்களோடு சற்று நேரம் உரையாடிய டிரம்ப், அவர்கள் வரைந்த தேசிய கொடிக்கு வண்ணம் கொடுத்தார்.

சிவப்பு கோடுக்கு கீழே வெள்ளை நிறம் இருக்க வேண்டிய இடத்தில், அவர் நீல நிற வண்ணத்தை கொடுத்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியதை அடுத்து, நெட்டிசன்களின் கிண்டலுக்கு டிரம்ப் உள்ளாகியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com