மான் இறந்து கிடக்கும் காட்சி.
மான் இறந்து கிடக்கும் காட்சி.

அரக்கோணம் அருகே நாய்கள் கடித்து மான் பலி

அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தோப்பில் மான் ஒன்று நாய்களால் கடிக்கப்பட்டு இறந்து கிடந்தது.
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தோப்பில் மான் ஒன்று நாய்களால் கடிக்கப்பட்டு இறந்து கிடந்தது. இது குறித்து அரக்கோணம் தாசில்தார் ஜெயகுமார், வருவாய் ஆய்வாளர் கல்யானி சம்பவ இடத்துக்கு சென்று மானை பார்வையிட்டு ஆற்காடு வனச்சரக அலுவலர் கந்தசாமிக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த கால்நடை மருத்துவர் மானை பிரேத பிரிசோதனை செய்தார்.

இறந்த மானுக்கு 2 வயதாகிறது ஆண் மான் என்பதும் நாய்களால் கடித்து இறந்து கிடந்தது குறித்தும் தெரியவந்தது. இறந்த மானை அதேபகுதியில் எரித்தனர்.

இது போன்று இப்பகுதியில் 4 மான்களுக்கு மேல் நாய்கள் கடித்து இறந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com