ஜே.என்.பல்கலைக்கழக மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

தி.மு.க. இளைஞரணி தலைவரான உதயநிதி ஸ்டாலின், தலைநகர் டெல்லி ஜே.என். பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
ஜே.என்.பல்கலைக்கழக மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
ஜே.என்.பல்கலைக்கழக மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
Published on

புதுடெல்லி:

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்குததல் நடத்தினர்.

அந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆஷி கோஷ் உள்பட பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். பல்கலைக் கழகத்தில் நடந்த தாக்குதலை கண்டித்து நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள்  நடந்து வருகின்றன.

இந்நிலையில், தி.மு.க. இளைஞரணி தலைவரான உதயநிதி ஸ்டாலின், தலைநகர் டெல்லி ஜே.என். பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார். கட்டண உயர்வுக்கு எதிராக அவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு தமது ஆதரவை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com