

திருப்பரங்குன்றம்:
மதுரை பசுமலையில் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா, ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலையில் கூத்தியார் குண்டு பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தி.மு.க. தொழிற்சங்கத்தினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 ஊராட்சியில் 22 ஒன்றிய கவுன்சிலர் வார்டு பகுதிகளிலும் 3 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பசுமலையில் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலையில் கூத்தியார்குண்டு தி.மு.க. தொழிற்சங்க தலைவர் செந்தில்குமார், தி.மு.க. முன்னாள் பிரதிநிதி நாகராஜன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் வடிவேல்ராஜன், தி.மு.க. இணை பொருளாளர் மகாலிங்கம், தொண்டர் பணிக்குழு கண்ணன், இளைஞரணி துணைச் செயலாளர் வேல்முருகன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
புதிதாக கட்சியில் இணைந்தவர்களை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் நாகலட்சுமி பாண்டுரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.