

சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகள் சார்பில் வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணி முதல் 5 மணி வரை மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது.
இதில் அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் இடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டையிலும், திராவிட கழக தலைவர் கி.வீரமணி சென்னையிலும், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி சிவகங்கையிலும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தஞ்சாவூரிலும் பங்கேற்கிறார்கள்.
சென்னையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், பெரம்பலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்கிறார்கள். #CauveryMangementBoard #MKStalin