பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி நகர செயல்வீரர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. ஆலோசனை கூட்டம்
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி நகர செயல்வீரர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பணி குழு செயலாளரும், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான வேளச்சேரி மணிமாறன் கலந்துகொண்டு பேசினார்.

இதில் மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com