செய்திகள்
துறையூரில் தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம்
துறையூரில் துறையூர் ஒன்றிய நகர தி.மு.க. செயல் வீரர்கள் ஆலேசனை கூட்டம் நடைபெற்றது.
துறையூர்:
துறையூரில் துறையூர் ஒன்றிய நகர தி.மு.க. செயல் வீரர்கள் ஆலேசனை கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்க்கு திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் நகர செயலாளர் முரளி ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் பங்கேற்க அனைத்து ஆயத்த பணிகள் மேற்கொள்வது, ஈரோட்டில் நடைபெறும் தி.மு.க மண்டல மாநாட்டில் துறையூர் தொகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வது, திமுக செயல் தலைவரின் பிறந்த நாள் பொது கூட்டஙகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் இளைஞரனி கிட்டப்பா சிலம் பரசன் ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளர் மகாலிங்கம் மதியழகன் செங்கை அசோகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

