

சென்னை:
பம்பாய் திருவள்ளுவர் மன்றம் வி.தேவதாசன் என்பவரால் 60 ஆண்டுகளுக்கு தொடங்கப்பட்டது. மன்றத்தில் வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை திறக்க வேண்டும் நிர்வாகிகளால் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக பெங்களூரில் அமைந்துள்ள சிலையை போலவே அரை டன் எடையும், 5 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட திருவள்ளுவர் சிலை சென்னையில் தயாரிக்கப்பட்டது. இந்த சிலை மன்ற வளாகத்தில் வருகின்ற செப்டம்பர் 2-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், பாண்டூப்பில் உள்ள பம்பாய் திருவள்ளுவர் மன்றத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்க மும்பை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் செப்டம்பர் 2-ம் தேதி செல்ல உள்ளார்.
இந்த சிலையை திறந்து வைக்க ஸ்டாலிலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மும்பையை சேர்ந்த திமுக நிர்வாகிகள் ஏற்கனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.